Thursday, January 30, 2020

30.01.2020-கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு

இன்று  நமது JCI ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் அமைந்துள்ள டிராக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா  வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மருத்துவ ஆலோசனையை வாலாஜா மருத்துவரும் நமது  கிளை இயக்கஉறுப்பினருமான JC கீர்த்தி அவர்களால்  விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டது...











Sunday, January 26, 2020

26.01.2020-குடியரசு தின விழா


வெள்ளி விழா ஆண்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு லாலாபேட்டை கலைமகள் மழலையர் பள்ளியில் நமது ராணிப்பேட்டை  பவர் சிட்டியின் சார்பாக
கொடியேற்றும் விழாவில் தலைவர் JC செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டன.....









Friday, January 24, 2020

24.01.2020-குருதிக்கொடை வழங்கப்பட்டது


நமது ராணிப்பேட்டை பவர்  சிட்டியின் கிளை இயக்கத்தின் சார்பாக திருமலை மெஷின் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட ஒரு நபருக்கு நமது புதிய உறுப்பினர் JC  சதீஷ்குமார் அவர்கள் மூலம் குருதிக்கொடை வழங்கப்பட்டது......

உடனடி முன்னாள் தலைவர் ஜேசி ஏழுமலை அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து கொடுத்தார்...

JC  சதீஷ்குமார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.......




Wednesday, January 22, 2020

22.01.2020-Sharpen Your Axe motivation programme


We are happy to inform you that today Jc Thirukumaran has successfully conducted training and motivation programme on topic "Sharpen Your Axe" at Rishi Matriculation School, Thiruvalam for 10th class students.

50 students attended the programme were benefited with tips to face exams.



Tuesday, January 21, 2020

21.01.2020..our lom Trainers took a training for lion's members at yercad


Today Our Lom had a pride moment, yes today our lom Trainers took a training for lion's members at yercad

Can you guess who are the trainers

Yes some of our Lom pilers PMK, JSM and STK

Topic Train the trainers
Hats of them
This is a proud moment to us









Sunday, January 19, 2020

19.01.2020 LGB AND GB MEETING தலைவர் ஜேசி N. இளங்கோவன் ( ஆற்காடு) அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது


வெள்ளி விழா ஆண்டின் மூன்றாவது  மாதாந்திர பொது கூட்டம் நமது கிளை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஜேசி N. இளங்கோவன் ( ஆற்காடு)  அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பொதுக்கூட்ட நிகழ்வின் இம்மாத சிறப்பு விருந்தினராக  பங்குபெற்று சிறப்பு செய்த ஜேசி இளங்கோவன் மற்றும் திருமதி இளங்கோவன் இவர்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...

மேலும் கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்த முன்னாள்  தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.....





Saturday, January 18, 2020

18.01.2020 பொது புத்தகங்கள் பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது


தலைவர் 2020 JC செல்வம் அவர்களின் மகன் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தற்காப்புக்கலை மாணவர்களுக்கு பொது  புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பொது புத்தகங்கள் பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது
இதில் புத்தகங்கள் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் பறறி குறிப்புகளும்  கொடுக்கப்பட்டன.....






Wednesday, January 15, 2020

15.01.2020-பொங்கல் தின மகளிருக்கான சிறப்பு கோலப்போட்டி


நமது  JCI  ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக வெள்ளி விழா ஆண்டின் பொங்கல் தின மகளிருக்கான சிறப்பு கோலப்போட்டி இன்று லாலாப்பேட்டை மற்றும் சிப்காட் ஆகிய பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது...,....

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர் ஆகவும்,
நடுவராகவும் கலந்து கொண்ட முன்னாள் தலைவர் ஜேசி பாஸ்கரன், திருமதி பாஸ்கரன், ஜேசி குமரேசன், ஜேசி திருக்குமரன் ஆகியோருக்கு  கிளை இயக்கத்தின் சார்பாக
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்......

மேலும்   நிகழ்வில் கலந்து கொண்ட JC  வேலு, ஜேசி சதீஷ்குமார், ஜேசி மதுமிதா, ஜேசி உதயகுமார்,jcrt சுபாஷினி, Jclt சிவானி இவர்களுக்கும்
 எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்......










Tuesday, January 14, 2020

14-01-2020-சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நமது  லாலாபேட்டை அரசினர் பள்ளியில் குஜராத் கம்பெனி நடத்திய விழிப்புணர்வு பேரணியில் நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக தலைவர் 2020  JC செல்வம்
கலந்துகொண்டு  மாணவர்களுடன் இணைந்து  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்... 


இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்....



Monday, January 13, 2020

13.01.2020 யோகா வகுப்பு

நமது ஜேசி ஐ  ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக இன்று நரசிங்கபுரம் அரசினர் நடுநிலை  பள்ளியில் 50க்கும்   மேற்பட்ட மாணவ மாணவியருக்கு  யோகா வகுப்பு தலைவர் 2020  அவர்களால்
 பயிற்றுவிக்கப்பட்டது.. 

இதன் மூலம் இதுவரை வெள்ளி விழா ஆண்டின் பல்வேறு திட்ட நிகழ்வுகளில் பயன்பெறும் பயனாளிகள் 2750
 நபர்கள் ஆவர்

13.01.2020-பொங்கல் தின சிறப்பு கொண்டாட்ட


நமது ராணிப்பேட்டை பவர்  சிட்டியின்  சார்பாக  ஆற்காடு அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் பொங்கல் தின சிறப்பு  கொண்டாட்ட நடனம், பாட்டு, ஒப்புவித்தல் ஆகிய திறன்கள்  வெளிப்படுத்தப்பட்டு அவர்களின் திறமையை  வளர்க்கும் விதமாக ஊக்குவிப்பு வகுப்பு நடத்தப்பட்டது
40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்....



Saturday, January 11, 2020

11.01.2020 வீழ்வ தெல்லாம் எழுவதற்கே


தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நமது ராணிப்பேட்டை  பவர் சிட்டியின்  சார்பாக பெல் ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில்

 "வீழ்வ தெல்லாம்
 எழுவதற்கே"

என்ற தலைப்பில்  200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி
 வகுப்பினை  நமது மண்டல பயிற்சியாளர் ஜேசி திருக்குமரன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது...






11.01.2020 கராத்தே தற்காப்பு பயிற்சி

நமது ராணிப்பேட்டை
 பவர்  சிட்டியின் சார்பாக
நரசிங்கபுரம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு
கராத்தே தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது..

கராத்தே பயிற்றுநர் மற்றும் தலைவர் 2020 அவர்களால் தற்காப்பு  கலை பயிற்சி வழங்கப்பட்டது



Friday, January 10, 2020

10.01.2020 சிரிப்போம் சிந்திப்போம்


உலக சிரிப்பு தினத்தை முன்னிட்டு இன்று நமது JCI ராணிப்பேட்டை பவர் சிட்டி சார்பாக கிளை அலுவலகத்தில்

 "சிரிப்போம் சிந்திப்போம் " 

என்ற தலைப்பில்  மண்டல பயிற்சியாளர் ஜேசி திருக்குமரன் அவர்களும் நமது சாசன தலைவர் JC PMK அவர்களும் இணைந்து சிரிப்புடன் கூடிய பயிற்சி வகுப்பினை கொடுத்தார்கள்....

JC உறுப்பினர்களும்
உறுப்பினர்  அல்லாதோரும் கலந்துகொண்டு சிரிக்க சிரிக்க நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்....




Tuesday, January 7, 2020

07.1.2020.மாணவ மாணவிகளுக்கு விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு

நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் இவ் வருட  நாற்பதாவது திட்டமாக
ஆற்காடு அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு இன்று நமது கிளை இயக்க உறுப்பினர் ஜேசி கணேஷ் அவர்கள் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் விதை பந்துகளை அவருடைய (5/1/2020) பிறந்த நாள் பரிசாக இன்று அனைவருக்கும் வழங்கினார்....

இந்நிகழ்வில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறைகள் பற்றியும் அவர்களுக்கு குறிப்பாக கொடுக்கப்பட்டது.
52 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்....

இந்நிகழ்வை ஜேசி தண்டபாணி அவர்கள் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல் படுத்தினார்...





Sunday, January 5, 2020

05.1.2020-2020 JCI Presidential Academy


JCI RANIPET POWER CITY  president 2020  ..... participant in the event of presidential Academy 2020 .. win the Team performance award ......



Coyambatour....Hotel plaza Inn....

Wednesday, January 1, 2020

01.01.2020 100 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் திட்டம்...


இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நமது ஜேசி ராணிப்பேட்டை  பவர் சிட்டி மற்றும் ஜேசி ராணிப்பேட் டிரஸ்ட் இணைந்து   100 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வு  ரெண்டடி கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது....

2020 ஆண்டின் முதல் நாளன்று முதல் திட்ட நிகழ்வாகவும் ஆட்சி மன்றம் பதவியேற்று 49 நாளான இன்று 29 வது நிகழ்வாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக லயன் MJF ரத்தினம் அவர்களும், கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் நாகராஜ் அவர்களும், முன்னாள் தலைவர்கள்  JC பாஸ்கரன், JC ரமேஷ் பாபு,  JC ஏழுமலை ஆகியோர் பங்கு பெற்று நிகழ்வில் கலந்து கொண்டு கண் கண்ணாடி வழங்கினர்.

மேலும்  Jc பெருமாள்,JC வேலு, JC கார்த்திக், JC உதயகுமார் மற்றும் தலைவர் 2020  JC செல்வம் நிகழ்ச்சியில் பங்கு பெற்று கண் கண்ணாடி வழங்கினர்.

இந்நிகழ்விற்கு நன்கொடை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் இயக்கத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்