நமது கிளை இயக்கத்தின் முன்னாள்
தலைவர் ஜேசி பாஸ்கரன் அவர்கள்
இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு
இலவச கண் சிகிச்சை முகாம்
லாலாப்பேட்டை கலைமகள் பள்ளியில் நடத்தி
தனது பிறந்தநாளை மிக சிறந்த நாளாக
செயல்படுத்தினார்.
இக் கண்சிகிச்சை முகாமில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.
மூன்று பேருக்கு இலவச கண்
அறுவை சிகிச்சைக்கு வேலூர் அரசு மருத்துவ
கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஐந்து பேருக்கு இலவச கண்
கண்ணாடி வழங்கப்பட உள்ளது.
10க்கும் மேற்பட்டோருக்கு
இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன.
மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு
கண் நல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இவை அனைத்தும் பிறந்தநாள் பரிசாக சேவை நோக்கோடு
மக்களுக்கு அளித்து தனது பிறந்தநாளைசிறந்த
நாள் ஆக்கினார் முன்னாள் தலைவர் ஜேசி
பாஸ்கரன் அவர்கள்.
இந்நிகழ்வு முன்னாள்
தலைவர் ஜேசி திருக்குமரன் முன்னிலையில்
தலைவர் ஜேசி செல்வம் ஒருங்கிணைப்பில்
, செயலாளர் ஜேசி தண்டபாணி , JC மதுமிதா
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார்கள்.
மனித சேவையே மகத்தான சேவை என மனதில் கொண்டு சிறந்த சேவையாற்றிய ஜேசி பாஸ்கரன் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.