Saturday, December 21, 2019

21.12.2019 -முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்வு....


நமது கிளை இயக்கத்தின் புதிய உறுப்பினர் JC மதுமிதா அவர்கள் தந்தையின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் ஒரு நாள் உணவு வழங்கினார்.
ஜே சி யில் தன்னை இணைத்துக் கொண்டு மனித சேவையை இலக்காக வைத்து இந் நிகழ்வு இன்று செயல்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் திட்ட இயக்குனராக மதுமிதா அவர்கள் செயல்பட்டு குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து அனைவருக்கும் உணவு வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் உடனடி முன்னாள் தலைவர் ஜேசி ஏழுமலை அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து கொடுத்தார்.

தலைவர் 2020 அவர்களால் முதியோர்களுக்கு மன ஆரோக்கிய சிறப்பு உரை ஒன்றும் வழங்கப்பட்டது.


JC கணேஷ் அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு அனைவருக்கும் உணவு பரிமாறி நிகழ்விற்கு உறுதுணையாக இருந்தார்.

ஜேசி மதுமிதா அவர்களின் குடும்பம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்