Tuesday, December 17, 2019

17.12.2019 கல்வி உதவித்தொகை



நமது கிளை இயக்கத்தின் சாசன தலைவர் JC PMK அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் , புதிய உறுப்பினர் JC சதீஷ்குமார் இம்மாத பிறந்த நாளை முன்னிட்டும் சாதிக்க நினைக்கும் ஒரு மாணவிக்கு கல்வி உதவித்தொகை ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டது. அம்மாணவியின் பெற்றோரால் அத்தொகை பெறப்பட்டது.
 இந்நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் தற்காப்பு பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு பயிற்சி வகுப்பாக அளிக்கப்பட்டது.
 இப் பயிற்சி வகுப்பினை தற்காப்புக் கலை பயிற்றுநர் மற்றும் JCIRPC  தலைவர் 2020
அவர்களால் அளிக்கப்பட்டது.
 இதில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
 திட்ட இயக்குனராக ஜேசி சதீஷ் குமார் அவர்கள் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார்.

 மாணவியின் கல்வி உதவித்தொகையை ஊக்கத்தொகையாக அளித்த JC PMK ,JC சதீஷ்குமார் அவர்களின் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.