Friday, December 13, 2019

13 Dec 2019 - நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

வெள்ளி விழா ஆண்டின் ஆட்சி மன்றம் பதவியேற்று முதல் மாத இறுதி நாள் மற்றும் 30 ஆவது நாளை முன்னிட்டு இன்று ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது..

நிலவேம்பு கசாயம் பருகுவதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும், உடல்நலம் பேணல் பற்றியும், நோய் வராமல் காக்கும் முறைகளையும் பயிற்சி வகுப்பாக கொடுக்கப்பட்டது.
இப் பயிற்சியினை மண்டல பயிற்சியாளர் ஜேசி திருக்குமரன் அவர்கள் மூலம் எடுக்கப்பட்டது.

நிகழ்வின் திட்ட இயக்குனராக புதிய உறுப்பினர் JC சதீஷ் குமார் அவர்கள் இத்திட்டத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.
இத்திட்டம் சிறப்பாக அமைந்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி
அன்புடன்
JC விஸ்வநாதன்
VP COMMUNITY 2020
ராணிப்பேட்டை பவர் சிட்டி.