இன்று ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்
மாணவ மாணவிகளுக்கு யோகக் கல்வியில் சிறப்புப்
பயிற்சியான காயகல்ப யோகா பயிற்சி
வகுப்பு நடத்தப்பட்டது.
இதில்
50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்
கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
காயகல்ப
யோகப் பயிற்சியை துணைப்பேராசிரியர் (பயிற்சி) மனவளக்கலை யோகா
பயிற்றுநர் மற்றும் நமது ஜேசி
இன் மண்டல பயிற்சியாளரும் ஆன
ஜேசி திருக்குமரன் அவர்கள் பயிற்சி வகுப்பினை
சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.
பயிற்சி
பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வினை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய
முதல்வரும், நமது செயலாளர் 2020 ஜேசி
தண்டபாணி அவர்களும் துவங்கி வைத்தனர்.
இப்பயிற்சி
வகுப்புக்கான திட்ட இயக்குனராக புதிய
உறுப்பினர் ஜே சி உதயகுமார்
அவர்கள் பொறுப்பேற்று திட்ட நிகழ்வினை திறம்பட
செய்து முடித்தார்.
இக் காயகல்ப்ப யோகப் பயிற்சியினை சிறப்பாக
நடத்திக் கொடுத்த ஜேசி திருக்குமரன்
அவர்களுக்கு நமது கிளை இயக்கத்தின்
சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.