நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் கிளை
இயக்கத்தின் சார்பாக 2020 ஜே சி யில்
தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு சமூகத்திற்கான சிறந்த பணிகளில் ஒன்றான
மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை
இன்று நான்கு பள்ளிகளில் விதைப்பந்துகள் அளித்து இந்த வருடம்
பயிற்சி வகுப்புகளில் பங்குபெறும் அந்தப் பள்ளிகளுக்கு சான்றிதழ்களும்
வழங்கப்பட்டன.
இதில் லாலாப்பேட்டை அரசினர் பள்ளி
லாலாபேட்டை
கலைமகள் மழலையர் பள்ளி
நரசிங்கபுரம்
அரசினர் பள்ளி
ஆகிய பள்ளிகளில் புதிய உறுப்பினர்கள் பங்கு
பெற்று நிகழ்வுகளை திறம்பட செய்தார்கள்.
மேலும் மரத்தைப் பற்றி,
மரம் வளர்ப்பதின் நன்மைகளைப் பற்றி,
மரம் வளர்வதால் நாம் சமுதாயத்திற்கு ஆற்றும்
சேவை பற்றி ஒரு குறிப்பும்
கொடுக்கப்பட்டது.
இத்துடன்
புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வின் திட்ட இயக்குனராக புதிய
உறுப்பினர் உதயகுமார் மற்றும் திட்டத்தை வழிநடத்திச்
சென்ற முன்னாள் தலைவர் திருக்குமரன்
அவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய புதிய உறுப்பினர்
பிரபு அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.